எம்.சதீஷ் குமார், நிறுவனர், http://sathishspeaks.com/
தொலைக்காட்சி வரலாற்றில் ‘கௌன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சி மிகப்பெரிய ஹிட்டான நிகழ்ச்சியாகும். நிறைய தொடர்கள், ரியாலிட்டி ஷோக்கள் வந்திருக்கிறது. ஆனால், இந்த ஒரு நிகழ்ச்சி ஹிட் ஆவதற்கு என்ன காரணம் என்றால், அவர்கள் ஒரு பெரிய தொகையை வெற்றியாளருக்கு பரிசாக அளிப்பார்கள். 5 கோடி ரூபாய் வரைக்கும் பரிசளிப்பார்கள். ஒரு கோடி, இரண்டு கோடி என்பது எல்லோரின் கனவாக இருக்கும். ஆனால் எல்லோராலும் அந்த நிகழ்ச்சிக்கு சென்று ஒரு கோடி ரூபாய் வெல்வது சாத்தியமற்றது. யாராவது ஒருவருக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கலாம்.
ரூ. 1 கோடி இலக்கு…!
வாழ்க்கையில், நீங்கள் ஒரு ஒரு கோடி ரூபாய் சேர்க்க வேண்டும் என்றால், கீழ்க்காணும் எட்டு படிகளை பின்பற்றினால் போதும். ஒரு கோடி ரூபாயை நிச்சயம் உங்களால் அடைய முடியும்.
படி 1: முதலில் சேமிப்பு, பிறகு செலவுகள்..!
நமக்கு சம்பளம் வரும்போது, செலவுகளை செய்கிறோம். 25,000 ரூபாய் சம்பளத்தில், 23,000 ரூபாய் செலவு செய்கிறோம்.. மீதி ரூ.2000. (வருமானம் – செலவுகள் = சேமிப்பு) – இதைத்தான் நாம் சேமிக்கிறோம். இப்படி செய்வது தவறாகும். இதற்கு பதில், வருமானம் – சேமிப்பு = செலவுகள் இப்படித்தான் நாம் தொடங்க வேண்டும். வருமானம் எப்படி முன்கூட்டியே நிலையானதாக இருக்கிறதோ, அப்படியை சேமிப்பையும், செலவுகளையும் நிலையானதாக முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும்.
வழக்கமான, உங்களின் வருமானத்தில் 60 சதவிகிதம் வீட்டுச் செலவுகள் ஆகும். 20 சதவிகிதம் நீண்ட கால முதலீடு, 20 சதவிகிதம் குறுகிய கால சேமிப்பு. இப்படி ஒரு கணக்கு வைத்துக் கொள்ளலாம்.
இப்போதுதான் நீங்கள் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளீர்கள் என்றால், 80% வீட்டுச் செலவுகள் என்றும், 10 % நீண்ட கால சேமிப்புக்கும், 10% குறுகிய கால சேமிப்புக்கும் ஒதுக்கிவிடலாம். ஆனால், இப்படி ஏதோவொரு விகிதத்தை முன்கூட்டியே தீர்மானித்து விட வேண்டும்.
உதாரணமாக, ரமேஷ், மகேஷ் என்று இருவர் இருக்கிறார்கள். ரமேஷ் 50,000 ரூபாய் சம்பாதிக்கிறார். மகேஷ் 25,000 ரூபாய் சம்பாதிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்த இருவரில் யார் பணக்காரர் என்று கேட்டால், எல்லோரும் 50000 சம்பாதிக்கும் ரமேஷ் தான் பணக்காரர் என்று சொல்வோம். ஆனால், ரமேஷ் 50,000 ரூபாய் சம்பாதித்தாலும், 10% அதாவது 5000 ரூபாய்தான் முதலீடு செய்கிறார். மகேஷ் 25,000 ரூபாய் சம்பாதித்தாலும், 20% அதாவது 5,000 ரூபாய் முதலீடு செய்கிறார். இந்த இருவரில் யார் பணக்காரர் என்றார் 20 % சேமிக்கும் மகேஷ் தான் பணக்காரர்.
ஆகையால், நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், சம்பளம் வரப்போகிறது என்றால், சேமிப்புக்கு எவ்வளவு முதலீடு செய்யப் போகிறோம் என்பதை முதலிலேயே தீர்மானித்துவிடுங்கள். அதை நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் வர வேண்டும் என்பதாக முதலீடு செய்ய வேண்டும்.
படி 2: வாழ்க்கையும் வாழ்க்கை முறையும்..!
உங்களின் வாழ்க்கையை (Life) மேம்படுத்துங்கள். உங்களின் வாழ்க்கைமுறையை (Lifestyle) லைஃப்ஸ்டைலை மேம்படுத்தாதீர்கள். நாம் வாழ்க்கையில் செய்யும் மிகப்பெரிய தவறு நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து வாழ்வதாகும்.
என் நண்பன் அந்த பிராண்டடு விலை உயர்ந்த போனை வாங்கிவிட்டான். என் நண்பன் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு வாங்கி விட்டான். இதுபோல நிறைய ஒப்பீடு செய்து பார்த்தல் கூடாது. பதவி, அதிகாரம், பணம், லைஃப்ஸ்டைல் போன்ற எல்லாவற்றிலும் ஒரு போட்டி மனப்பான்மை நமக்குள் வந்துவிட்டது. மற்றவர்களுடன் ஒப்பிட்டே நம்முடைய வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறோம்.
நீங்கள் கல்லூரியில் படித்து முடிக்கும் வரைதான் எல்லோருக்கும் ஒரே கேள்வித்தாள். அங்கு, அடுத்தவர் விடைத்தாளை பார்த்து எழுதினாலும் உங்களுக்கு மதிப்பெண் கொடுப்பார்கள். ஆனால், வாழ்க்கையில் எல்லோருக்கும் வெவ்வேறான கேள்வித்தாள் தான். ஆகையால், மற்றவர்களை பார்த்து நீங்கள் பின் தொடர வேண்டாம். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை யோசிப்பதுதான் படி 2.
படி 3: அவசர செலவுகளை சமாளிக்க தயாராக இருப்பது
கோவிட் 19 வந்து போனது. வேலை இழப்பு, சம்பளம் குறைப்பு. இதுபோல நிறைய எதிர்பாராத இழப்புகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கும். இதுபோல எதிர்பாராத செலவுகள் வரும்போது, கடனை பலரும் வாங்கித்தான் செலவு செய்கிறோம். குறைந்தபட்சம் ஒரு ஆறு மாதத்துக்கான செலவு தொகையையாவது ஒரு ஃபிக்ஸட் டெபாசிட்டில், எமெர்ஜென்சி ஃபண்டாக வைத்துக்கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமாகும். இதுதான் தனிநபர் நிதியின் (personal finance) அடிப்படையாகும்.
படி 4 மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு..!
வாழ்க்கையில் காப்பீடு எடுப்பது மிக முக்கியமானதாகும்.
நீங்கள் ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறீர்கள் என்றால், அந்தக் கம்பெனி ஒரு மருத்துவக் காப்பீடு அதிக கவரேஜ் தொகைக்கு கொடுக்கிறது என்றால், நீங்கள் தனியாக பாலிசி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. உடல் பிரச்னைகள் என்பது யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். விபத்துகள் நடக்கலாம். இதுபோல நடக்கும்போது 75% பேர் கையில் இருந்துதான் பணத்தை செலவு செய்கிறார்கள். அதுவும் கடன் வாங்கிதான் செய்கிறார்கள். இதனை தவிர்க்க மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியமாகும்.
ஒருவர் குடும்பத்தை வழி நடத்துபவராக இருந்தால், வாழும் போது குடும்பத்துக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து விடுவார்கள். துரதிஷ்டவசமாக வருமானம் ஈட்டும் நபர் இல்லாமல் போகும் சூழ்நிலை வருகிறது. இப்போது, குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் தேவைகள் சமரசமாகி விடக்கூடாது. அதற்கு, குறைவான பிரீமியத்தில் அதிக கவரெஜ் வழங்கும் டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்திருந்தால், குடும்பத்தினரின் நிதித் தேவைகள் நிச்சயமாக பூர்த்தியாகும் எனலாம்.
படி 5: தெளிவான செலவு திட்டம் தேவை.!
இது மிக முக்கியமானதாகும். 50% பிரச்னைகள் எப்படி தீரும் என்றால், உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு என்ன வேண்டும் என்று நீங்கள் தெளிவாக தெரிந்துகொண்டால் மிகப்பெரிய பிரச்னைகள் எல்லாம் தீர்ந்துவிடும். நீண்ட கால முதலீட்டில் (long term) என்ன வேண்டும், குறுகிய கால (short term) முதலீட்டில் என்ன வேண்டும் என்பதை தெளிவாக பிரித்துக் கொள்ளுங்கள்.
குறுகிய கால முதலீடு என்பது மூன்று வருடங்களுக்குள்ளாக, மொபைல் போன், கார், சுற்றுலா போன்றவையாகும். இதற்கு வருடத்தின் செலவுகளில் 5%, 7% 10% இப்படி ஒரு தொகையை தீர்மானித்துவிட்டால், முடிவு எடுப்பது மிகவும் எளிதாகிவிடும். நம் குடும்பத்தினரிடம் சொல்லிவிடலாம். இவ்வளவுதான். இந்த தொகைக்குள் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செலவு செய்யுங்கள் என்று சொல்லிவிடலாம். நீங்கள் இப்படி ஒரு தொகையை தீர்மானிக்கவில்லை என்றால், உங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது. தேவையில்லாமல் அதிக பணம் செலவாகக் கூடும். .
அதேபோல, நீண்ட கால திட்டங்கள், ஓய்வுகால திட்டங்களில், நான் ஓய்வு பெறும்போது சொந்த வீட்டில்தான் இருப்பேன். நான் 2040-ம் வருடத்தில் ஓய்வு பெறுவேன். அப்போது முதலீடுகள் மூலம் மாதம் 2 லட்சம் ரூபாய் வருமானம் வரும். இப்படி ஒரு தெளிவு திட்டம் இருந்தது என்றால், இன்றைக்கு நீங்கள் எவ்வளவு தொகை ஒதுக்க வேண்டும் என்பது தெளிவாகும்.
எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் இன்ஜினீயரிங் படிப்பதற்கு நானே அவனுக்கு செலவு செய்வேன். ஆனால், அவன் வெளிநாட்டில் படிக்கிறேன் என்றால், கண்டிப்பாக நான் செலவு செய்ய மாட்டேன். ஸ்காலர்ஷிப் அல்லது கல்விக் கடன் வாங்கி தான் படிக்க வைப்பேன். இந்த மாதிரி முடிவை தெளிவாக எடுத்து, அவனிடமும் சொல்லிவிட்டால், அவனும் ஒரு மாற்று வழியை யோசித்து வைத்திருப்பான். ஆகையால், நீண்ட கால முதலீட்டுக்கு, எது எனக்கு வேண்டும், எதை என்னால் பண்ண முடியும், எது எனக்கு கூடுதல் செலவு என்பதை தெளிவாக நீங்கள் முடிவு எடுத்துவிட்டீர்களானால் மிகவும் நல்லது.
படி 6: நமக்காக மற்றவர்களை முதலீடு செய்ய வைக்கலாம்.
இந்தியாவில் இருக்கும் சிறந்த மனிதர்களை உங்களுக்காக வேலை செய்ய வைக்கலாம். அம்பானி, அதானி போன்ற நிறைய தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்படி உங்களுக்கு வேலை செய்வார்கள்? இதற்கு பெயர்தான்`பங்கு முதலீடு (stock investing). உங்களுடைய சேமிப்பை பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யும் போது, பணவீக்கதை விட இரண்டு மடங்கு வருமானம் வருவதற்கு அதிக பெரிய வாய்ப்பு இருக்கிறது. பணவீக்கம் 6-7 % என்றால் 12-14 % உங்களுக்கு வருமானம் வரும். ஆகையால், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்ய தொடங்குங்கள். பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சிறந்ததாகும்.
படி 7: எதை செய்யக் கூடாது என்பதில் தெளிவு…!
பணத்தை கொண்டு வருமானம் ஈட்ட எதைச் செய்யக்கூடாது என்பதைத் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். திரிலான தினசரி பங்கு வர்த்தகம், ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன், கிரிப்டோ கரன்சி வர்த்தகம் போன்றவற்றால் பலரும் பணத்தை அதிகமாக இழக்கிறார்கள். பேராசை மற்றும் பயம் இந்த இரண்டும் வந்துவிட்டால், நம்முடைய பொது அறிவை இழக்கிறார்கள்.
எஃப்&ஓ-வில் முதலீடு செய்து, ஒரு பெரிய தொகையை சேர்த்து விட்டேன் என்று சொல்லும் யாரையாவது, தனிப்பட்ட முறையில் தெரியுமா உங்களுக்கு?
அப்படிப்பட்டவர்களை கண்ணில் பார்த்துள்ளீர்களா? யாரோ ஒருவர் டெலிகிராம் சேனலில், வாட்ஸ் அப் சேனலில் விளம்பரம் கொடுக்கிறார்கள் என்று, அதற்கு பின்னால் சென்று முதலீடு செய்து, மொத்த பணத்தையும் இழந்தவர்களை, பலப்பல பேரை நான் பார்த்திருக்கிறேன். ஆகையால், எதைச் செய்யக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.
படி 8: செயலில் இறங்குங்கள்..!
எல்லாம் எனக்குத் தெரியும். ஆனால், அதற்கான முயற்சியை நான் எடுக்க மாட்டேன், செயல்படுத்த மாட்டேன் என்றால், நீங்கள்தான் ஒரு பெரிய முட்டாள். ஏனென்றால், அறிவாளி, திறமையானவர் என்றால், நிறைய ஐடியாக்கள் இருந்தாலும், அதை செயல்படுத்தினால்தானே உங்களுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும். செயல்படுத்தாமல், அடுத்த மாதம் செய்யலாம்; ஆறு மாதம் கழித்து செய்யலாம் அல்லது சம்பளம் உயரும் போது செய்யலாம் என்று தள்ளிப்போட்டால் அது தவறு.
25 வயதில் வேலைக்கு சேரும் ஒருவர் மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 35 ஆண்டுகளுக்கு அவரின் 60 வயது வரைக்கும் முதலீடு செய்து வந்தால், முதலீட்டுக்கு ஆண்டுக்கு 13% வருமானம் கிடைத்தால் ரூ.1 கோடிக்கு மேல் சேர்ந்துவிடும்.
சீக்கிரமாக ஆரம்பித்து முதலீடு செய்ய ஆரம்பிப்பது மிகவும் முக்கியமானதாகும். அவசரக் கால நிதியை உருவாக்குங்கள், காப்பீடுகளை எடுங்கள். பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை மேற்கொண்டு செயலில் இறங்குகள். இந்த எட்டு படிளை பின்பற்றுங்கள். நீங்கள் கண்டிப்பாக கோடீஸ்வரராக சீக்கிரமே ஆகலாம்.
Sathish is a Crorepathi Creator | Author | AMFI Registered Mutual Fund Distributor | Columnist | Youtuber
I have 22 years of experience in Financial Services, in which 15 Years of Experience in being associated with major banks and 7+Years of experience personally as founder of Creating Wealth Company
Still Dreaming How to Start Your Investment?
My First 1Cr Community is a platform for you to plan your First 1Cr and I will Guide you every week Saturday in Live Webinar Session
Visit My Website for more Information www.sathishspeaks.com
Join My First 1Cr Club Community www.webinar.sathishspeaks.com
Check out our Youtube Channel – https://www.youtube.com/@Sathish_Speaks_/featured
Contact us – 7810079946